Scripture வேதவசனம்: 1 இராஜாக்கள் 6:19 கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைக்கிறதற்கு ஆலயத்துக்குள்ளே சந்நிதி ஸ்தானத்தை ஆயத்தப்படுத்தினான்.
Observation கவனித்தல்: ஒரு கட்டிடத்தில் வெளிப்புறத்தைக் கட்டி முடிப்பதற்கு ஆகும் காலத்தை விட உட்புறத்தைக் கட்டி முடிக்க அதிக காலம் எடுப்பதை நான் கவனித்திருக்கிறேன்.
வெளியில் இருந்து பார்க்கும்போது கட்டிமுடிக்கப்பட்டதாகத் தோன்றும், ஆனால் ஆட்கள் உள்ளே இன்னும் வேலை செய்து கொண்டிருப்பார்கள்.
ஆலயத்திற்குள் அமைந்த அந்த சந்நிதானம் என்பதை மனிதனின் இருதயத்தைப் (நம் உணர்வுகள், தியானங்கள் மற்றும் நம்பிக்கைகளை வெளிப்படுத்துகிற இடம்) போன்றதாகும். தேவனுடைய பிரசன்னம் தங்கும் உடன்படிக்கைப் பெட்டியை வைக்க ஆலயத்தை ஆயத்தப்படுத்துவது எப்பொழுதும் திட்டமிடப்பட்டது. ஆகவே போதிய ஆயத்தம் உள்ளே தேவைப்பட்டது.
Application கவனித்தல்: சிலுவையில் இயேசு செய்து முடித்ததை என் வாழ்க்கையில் அப்பியாசிப்பதின் மூலமாக என் இருதயம் ஆயத்தப்படுத்தப் பட்டிருக்கிறது. சிலுவையின் சுத்திகரிக்கும் செயலில் நான் சில வேளைகளில் தடுமாறலாம். என்னைச் சுத்திகரிப்பதைக் காட்டிலும் அதிகமானவைகளை தேவன் விரும்புகிறார் என்பதை நான் மறந்துவிடுகிறேன். என் இருதயத்தில் அவர் வைக்க விரும்பும் காரியம் உண்டு. உண்மையில் அவருடைய திட்டம் என்னவெனில், எனக்குள் வசிப்பது ஆகும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, பரிசுத்தமும் தூய்மையுமான, சோதிக்கப்பட்டு உண்மையானதாக விளங்குகிற ஒரு ஸ்தலமான என் இருதயம் விளங்க என்னை ஆயத்தப்படுத்தும். நன்றியறிதலுடன், நான் ஒரு ஜீவனுள்ள நீர் தங்குகிற ஒரு சந்நிதானமாக இருப்பேன். ஆமென்
2 comments:
Jesus Love to You
Visit: http://www.valibar.blogspot.com
Useful thoughts glory be to god...
Post a Comment