Wednesday, February 22, 2012

மறுபடியும் சிலுவையில் அறைதல்

தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து  அவமானப்படுத்துகிறபடியால், .... வசனம்.6


வாசித்து தியானிக்க: எபிரேயர் 6:1-12

இயேசுகிறிஸ்துவின் தனித்தன்மை வாய்ந்த சிலுவை மரணம் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்தது என்றாலும் கூட, இன்றும் அவர் சிலுவையில் அறையப்பட்டுக் கொண்டிருக்க முடியும் என்பதை இன்று நம் முன்பாக இருக்கிற வசனம் கூறுகிறது. கிறிஸ்துவை மறுபடியும் சிலுவையில் அறைதல் எப்படி சாத்தியமாகும்? எபிரேய நிருப ஆக்கியோனின் கருத்துப்படி, ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும் இருக்கிறவர்கள் வழிவிலகி விசுவாசத்தை மறுதலிக்கிறவர்களாக இருக்கும் போது இவ்வாறு நடக்கிறது. இப்படிப்பட்ட மறுதலிப்புகள் கிறிஸ்துவை சிலுவையில் அறைய ஓங்கி சுழற்றப்பட்ட சுத்தியல்களுக்கும், அவருடைய சரீரத்தில் இறங்கின ஆணிகளுக்கும் நிகரானதாக இருக்கிறது.
இந்த வேதபகுதியானது உண்மை கிறிஸ்தவர்களைக் குறிக்கிறதா அல்லது பெயர்கிறிஸ்தவர்களைக் குறிக்கிறதா என்பதைக் குறித்து வேதாகம விள்ககவுரையாளர்களிடம் வேறுபட்ட கருத்து உண்டு. பரம ஈவை ருசிபார்த்தும் என ஆக்கியோன் குறிப்பிடுவதால், குறிப்பாக 4ம் வசனம் பரிசுத்த ஆவியைப் பெற்றதைக் குறித்துச் சொல்கிறபடியால், இது உண்மைக் கிறிஸ்தவர்களைத்தான் குறிப்பிடுகிறது எனச் சிலர் கூறுவர். ஒன்றுடன் ஒன்றிப் போகாமல் நீங்கள் அதை ருசிபார்க்க முடியாது என்று வேறுசிலர் கூறுவர்.
ஆனால் நாம் இதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாவது, இதிலிருந்து நான் சுட்டிக்காட்ட விரும்பும் கருத்து என்னவெனில், கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டு, ஆனால் அவர் கட்டளையிட்டபடி வாழ மறுக்கிறவர்கள் அவரை அவமானப்படுத்தி மறுதலிக்கிறவர்களாகவே உண்மையில் இருக்கிறார்கள். நான் இதை ஒரு உருவகமாகவே சொல்கிறேன். நாம் எவ்வாறு செய்யவேண்டும் என்று அவர் சொல்கிற படி நடக்காமல், அவரை அவமானப்படுத்தும் விதமாக நாம் செயல்படும்போது இரட்சகர் மறுபடியும் இரத்தம் சிந்துகிறார். உலகத்துக்காக கிறிஸ்து பட்ட பாடுகளுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆனால் அவருடைய நாமத்தைத் தரித்துக் கொண்டு, அந்தப் பெயரிலேயே மிகவும் அருவருப்பான மற்றும் வெறுக்கத்தக்க செயல்கள் பலவற்றைச் செய்கிறதினால் அவர் படும் பாடுகளைக் குறித்து நாம் யோசித்து இருக்கிறோமா? நம் ஆண்டவரின் வேதனை அவர் சிலுவையில் அறையப்படதுடன் முடிந்துவிடவில்லை. நாம் அவருடைய விருப்பத்திற்குப் பதிலாக நம் ;சொந்த விருப்பங்களை நாம் முன் வைக்கும் ஒவ்வொரு தடவையும் அவருடைய பாடுகள் தொடர்கிறது.

ஜெபம்: என் இரட்சகரும் ஆண்டவருமாகிய இயேசுவே, உம் பிள்ளையாக நான் உம் வழிகளில் நடக்காமல் என் சொந்த வழிகளில் நான் நடக்கும்போது உமக்கு நான் உண்டாக்கின வருத்தம் மற்றும் துக்கத்திற்காக என்னை மன்னியும். சுத்திகரிப்பிற்காக மாத்திரம் நான் இதைக் கேட்காமல், இந்த தீய உலகில் நான் செய்யவேண்டும் என்று நீர் விரும்புகிற அனைத்தையும் செய்வதற்கான வல்லமையைப் பெறுவதற்காகவும் நான் கேட்கிறேன். ஆமென்.

மேலதிக வாசிப்புக்கு: எபேசியர் 4:29-32@ 1யோவான்2:15-23.

சிந்தனைக்கு:
1. பரிசுத்த ஆவியானவரை எது துக்கப்படுத்துகிறது?
2. குமாரன மறுதலித்தலையும், குமாரனை ஏற்றுக்கொள்ளுதலையும் வேறுபடுத்திப் பார்க்கவும்.
Source: A Fresh Look at the Cross by Slewyn Huge

http://www.tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=26&topic=2022&Itemid=287

No comments: