கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை, நீரே பெரியவர், உமது நாமமே வல்லமையில் பெரியது.ஜாதிகளின் ராஜாவே, உமக்குப் பயப்படாதிருப்பவன் யார்?தேவரீருக்கே பயப்படவேண்டியது, ஜாதிகளுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய எல்லா ராஜ்யத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை.
ஆகாயமண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்? -கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்? -எங்கள் தேவன் எல்லா தேவர்களைப்பார்க்கிலும் பெரியவர்.
.... அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார். அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்@ நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.
அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் ...தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு..., கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்... அவர்... எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது. -கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்?
யாத்.8:10, எரே.10:6,7, சங்.89:6, 2நாளா.2:5, யாத்.15:11, சங்89:6, மீகா7:18,19, பிலி.2:6-8, எபி.2:17, உபா33:29.
Friday, April 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஆம் அவருக்கு ஒப்பானவர் எவரும் இல்லை. அவரை அறிவதே நித்திய ஜீவன்.
Post a Comment