நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. -அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை, உணர்வுள்ளவன் இல்லை, தேவனைத் தேடுகிறவன் இல்லை, எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள், நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள், இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள். -காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன், உமது அடியேனைத் தேடுவீராக, உமது கற்பனைகளை நான் மறவேன்.
அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது@ நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன், அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.
உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டு பிடிக்குமளவும் தேடித்திரியானோ?
ஏசாயா53:6, 1யோவான்1:8,ரோமர்3:12, 1Nhதுரு2:25, சங்119:176, சங்23:3, யோவான்10:27,28, லூக்கா 15:4.
Sunday, April 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment